Sunday 26 February 2012

அழகின் திருப்பம்

உன் ஒரு விழிப்பார்வையின் ஓரத்தில் இருக்கும்
கருவிழிக் காந்தத்தில் சிக்குண்ட இரும்பாய்
ஒட்டிக்கொண்ட என் மனம்
என்னோடு வர 
மறுத்ததே.

பாலைவனப்பள்ளமாய் நதியின் சுழற்சியாய்

உன் குண்டு கன்னத்தில் குழி விழும்போது
அதைக் கண்டு வியந்தேனே கனத்த மூச்சோடு



என் தோளில் சாயாத தோழியே
மண் வாழும் அழகு தேவதையே

உன் கருவண்ணக் கூந்தலில் கைவிட்டு
தலை கோதிட தவமிருந்தேன்.

என் ஐவிரல்களும் அவ்வப்போது அளவளாவி
இமை வருடி இதம் காண நிதம் விழைந்தேன்


செதுக்கிய செம்மாம்பழச் செதிலாய்
செய்து வைத்த உன் முகத்தில்
என் நகம் பட்டு சுகம்கான
உன்னை சுற்றிகொண்டே இருந்தேன்.


எங்கும் நிறைந்திருக்கும் இறைமயம் போல்  - என்
அங்கம் நிறைந்திருக்கிறாய்  நீ

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்கும் கொக்கு போல
காத்திருந்த கால தாமதத்தில் 



உன்னை தள்ளிக்கொண்டு போனவன் நாயே
உள்ளதும் போச்சே என இப்படி
உட்கார வைத்து விட்டாயே பேயே