அப்பா தச்சுவேலை
அம்மா படிப்பறிவில்லை
பிறக்க இடமில்லை
பிறந்தது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
கிடந்தது தீவனத்தொட்டியில்
வந்து பார்த்தவர் ஆடு மேய்த்தவர்
பொன் தூபப் பரிசுகளோடு
பிரச்சனை கொண்டுவந்த ஞானியர்
உயிர் பிழைக்க எகிப்துக்கு ஓட்டம்
தஞ்சம் பிழைக்க ஊர்மாற்றம்
போதிக்கும்போது ஏளனம் “இவன் தச்சனின் மகனல்லவா?”
ஏமாந்திருந்தால் கல்லெறி
பேயோட்டும்போது பரிகாசம் “இவன் பேய்களின் தலைவன்தான்”
நன்மை செய்தும் நன்றியில்லாத கூட்டம்
அது பரவாயில்லை
சீடர்களில் ஒருவன் காட்டிக்கொடுக்கிறான்
இன்னொருவன் இவரைத்தெரியாது
என சத்தியம் செய்கிறான்
காரிஉமிழப்பட்டு கசையால் அடிக்கப்பட்டு
முள்முடியோடு முற்றிலும் நிர்வாணமாய்
மூன்று ஆணிகளால் சிலுவைச்சாவு.
இறக்கும்வரை இழிவுதான்
இறந்தபின்தான் ‘இறைமகன்’கண்ணுக்குத் தெரிந்தான்.
இவன் உயிர்த்ததால் உலகம் துளிர்த்தது.
No comments:
Post a Comment