மனிதன் விலங்குகளோடு இருந்திருப்பான்
விலங்காக
வித்தியாசமாக யோசிக்கும்வரை.
அவனது வாழ்வு, சிரிப்பு, சிந்தனை
அனைத்தும் அவனை வித்தியாசமாக்கின.
அதுவே கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாயின.
சிந்தனையில் வித்தியாசம் இருந்தவனே
சிறந்தவனானான்
புத்தனின் போதனையும்,
இயேசுவின் அன்பும்
காந்தியின் நேர்மையும் வித்தியாசமானது
வரலாற்றில் பெயர் நிலைக்கக் காரணமானது.
வித்தியாசம் இல்லையென்றால்
மனித வளர்ச்சியில்லை.
நீயும் செம்மறிபோல வாழ்ந்துவிட ஆசையோ
செத்தமீன்தான் ஆற்றோடு போகும்
நீ செத்த மீனா?
No comments:
Post a Comment