அழகான கிராமம்
வளமான வயல்கள்
வழியில் வசதியான வீடுகள் - பல
வசதியோடு வீதிகள்
வளைந்து நெளிந்து போகும் பாதையில்
வம்பிழுக்கும் இளசுகள்.
தார்ச்சாலை முடிந்ததும் மண் சாலை ஆரம்பம்
உள்ளே வருவோரை வழுக்கிவிட தயாராக
பார்க்கும் குழந்தைகளில் புன்னகை
படிப்பவர்களிடம் மரியாதை
விரைவாக வேலை முடித்து
புத்தகம் எடுத்து படிக்க விரைந்தோடும்
கிழிந்த டவுசர்களும் ஒட்டுபோட்ட பாவாடைகளும்
கலைமகள் கொஞ்சம் முன்பே கண்திறந்திருக்கக் கூடாதா?
No comments:
Post a Comment