Monday, 19 September 2011

அந்த உயிர் அவ்வளவு கேவலமானதா?


தலித் தலைவர் நினைவுநாள்
தொண்டர்கள் கொடிபிடித்து ஊர்வலம்
பிரச்சனை வருமென எண்ணிபிரமுகர் சிறையடைப்பு
கொதித்தனர்கொடிக்காரர்கள்
எரித்தனர் கிடைத்ததை
ஒருவேளை அவர் வந்திருந்தால் 
அமைதியாக முடிந்திருக்கும்.
எது நடக்கக்கூடாதோ – அது நடக்க
காவலர் செய்த ஏற்பாடுகள் அபாரம்.
ஐந்து பேர் குண்டடிபட்டு பலி
இரண்டு பேர் கம்படிபட்டே பலியான அகோரம்.
எதுவும் நிகழாததுபோல் மக்கள்
‘செத்தவன் சேரிக்காரன்தானே’
மக்களின் மௌனம் மக்கள்தொகைக் குறைப்பை ஆதரிக்கிறதோ?


டுனிசியா நாட்டில் ஒரு பெட்டிக்கடைக்காரன் போலிசாரால் கொல்லப்பட்டதால்
மக்கள் புரட்சியில் நாட்டின் அதிபர் மாற்றம்
தொடர்ச்சியாக எகிப்து, லிபியா அதிபர்கள் தப்பியோட்டம்
இங்கிலாந்தில் ஒரு இளைஞன் துப்பாக்கிசூட்டில் பலியானதில்
லண்டன் மாநகரமே ஆடிப்போனது.


ஏழுபேர் பலி என்ன செய்தோம்?
ஏழைக்கு உயிர் இல்லையா? - இல்லை
அந்த உயிர் அவ்வளவு கேவலமானதா?

No comments:

Post a Comment