Monday, 12 September 2011

சாரலில் நனைந்த இதயம்





சிலிர்த்திடும் உடலில்
சிதறிய மழைத்துளிகள்
பட்டுத்தெரித்து பறந்து விழுகையில்
என்னை அறியாமலேயே மழையோடு ஒன்றான சிறுவயது ஞாபகம் சற்று நின்று போகிறது.
மழைச்சாரலில் திண்ணை நுனியில்
பாய்விரித்து இறுக்கமாய் போர்த்தி
குளிரை அனுபவித்துக்கொண்டே 
உறங்கும் சுகம் அடடா-அவ்வப்போது ஏங்குவதுண்டு.


விரைந்தோடும் வான்மேகமே 
எம்வயல்களின் நிலை பார்த்துமா இந்த ஓட்டம்?
வானம் பார்த்து பார்த்து தலைதாழ்ந்து கிடந்த தமிழனும் மேலே பார்த்தான்வருணபகவான் வரம் தருவானா என்று.
‘நல்லார் ஒருவர்பொருட்டு 
எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்றுசங்கம் கூறியதே.
ஒருவர்கூட கிடைக்கவில்லையோ.
நன்றாய் பாரும்உலகப்பார்வையில் நீயும் பார்க்கிறாயா?இங்கே நல்லவரெல்லாம் நல்லவரல்லர்
பொல்லாரும் பொல்லாரல்லர்.


உத்தமியின் வாக்கில் பெய்யும் மழையா நீ? – ஆராய்கிறேன்இரக்கம் உனக்கா - இல்லை
அண்டங்களின் ஆளுமை அவளுக்கா என்று.
பயம் வேண்டாம் - பத்தினி பதறினாலும் 
உன்னை பற்ற வைக்க முடியாது.

No comments:

Post a Comment