பலரைப் பார்த்திருக்கிறேன்
இறைவன் படைப்பில் இப்படியுமா என.
குறைகள் உடலில் கறைகளாய் இருப்பினும்
நிறைவான வாழ்வை நிதந்தோரும் வாழும்
பலரைப் பார்த்திருக்கிறேன்.
உருவிலா இறைவன் தன் கரையிலா அன்பை
சிலருக்கு மட்டும் சிறப்பாகத் தருகிறார்.
B.A B.Ed, first class ல் பாசான இறைவன் படைப்பில் இப்படியுமா என.
குறைகள் உடலில் கறைகளாய் இருப்பினும்
நிறைவான வாழ்வை நிதந்தோரும் வாழும்
பலரைப் பார்த்திருக்கிறேன்.
உருவிலா இறைவன் தன் கரையிலா அன்பை
சிலருக்கு மட்டும் சிறப்பாகத் தருகிறார்.
பார்வையற்ற என் வகுப்புத்தோழன் மகேஷ்.
பேருந்து ஒவ்வொன்றும் ஏறி
பொருள் பல கொண்டு
மேல் (உடல்) வலிக்க கால் கடுக்க உழைக்கும்
ஊனமுள்ள ஆனால் மானமுள்ள மனிதர்கள்.
வறுத்தெடுக்கும் வறுமையில்
வயிறைக் காலியாகவே வைத்து
வைராக்கியத்தோடு வாகை சூடிய வாலிபர்கள்
நல்லுடல் உள்ளத்தோடு உலவும் நம்மில்தான்
உருவெடுக்கும் நாசமாய்ப் போன வரி
"பேசாம செத்துப்போயிடலாம்"
சாதித்தவர்களின் சரித்திரத்தை சற்றுத் திருப்பிப்பார்.
சோதனைகள் சொந்தக்காரர்களாய்
சுகமாக உட்கார்ந்து சோறு சாப்பிட்டிருக்கும்.
தாண்டியவன் மீண்டான்
தடை என்றவன் மாண்டான்.
தீராத பிரச்சனைகளா?
மாறாத கஷ்டங்களா? - முகம்
வாடாமல் தேடிப்பார்.
பிரச்சனைக்குப் பின்னாலேயே
சமாளிக்க சந்து இருக்கிறது.
எவ்வளவு சிறிய எறும்பு
சுற்றிலும் சுண்டுவிரலால் தண்ணீர்விடு
எப்படியாவது தப்பிக்கப் பார்க்கும்.
தற்கொலையிட்டுச் சாக
எறும்பு ஒன்றும் மனிதனல்ல.
மானத்துக்காக, மனைவி போனதுக்காக
காதலுக்காக, பெற்றோர் மோதலுக்காக - என
தன்னுயிர் மாய்க்கும் தரமற்ற மனிதா
ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும்.
உனக்குக்கீழே வாழ்பவர் கோடி.
No comments:
Post a Comment