தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பாம்
கவரிமான் பரம்பரைக்கே கற்றுக் கொடுத்த விசயமாம்
வேறெந்த மொழியும் கொண்டிராத வார்த்தையாம்
வேறெந்த நாடும் கண்டிராத வாழ்வியலாம்
மானம்.
மானங்கெட்ட இந்த மானம்தான்.
மானம் உள்ள எவராவது
இந்த வார்த்தைக்கு புரியும்படியான
அர்த்தம் அளிப்பாரா? இல்லை
அதன் பயன் அல்லது அதன் தேவை பற்றி
எதாவது சொல்வாரா?
மானமுள்ள தமிழர்களே
ப்ளீஸ் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.
தன்மானத் தமிழ்த் தலைவர்களே
நீங்களாவது...
அதன் ஊருக்கே தெரியுமே நீங்கள் கவரிமானா
இல்லை சாலமோனா என்று.
(சாலமோனுக்கு 700 மனைவியர், 300 துணைவியர்)
சாதிமறுப்பு திருமணம் செய்த இளசுகளை
சாதனையாளனாக்கி சரித்திரம் கண்டிருந்தால்
சந்தோசப்பட்டிருப்பேன்.
சந்தியில் நிறுத்தி பிஞ்ச செருப்பால் அடித்து
சாதி மானம் காத்த சான்றோரே
மானத்தின் அர்த்தம் சொல்வீரா?
விருதாச்சலம் கண்ணகியும் முருகேசனும்
தருமபுரி வெற்றிவேலும் சுகன்யாவும்
ஈரோடு இளங்கோவும் செல்வலக்ஷ்மியும்
திருவண்ணாமலை துரையும் தேன்மொழியும்
பரமக்குடி டேனியலும் திருசெல்வியும்
பழனி பத்ரகாளியும் ஸ்ரீ ப்ரியாவும்
தம் குடும்பத்தாராலேயே கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் வேதாரன்யத்தில் அண்ணனால்
அடித்து கொல்லப்பட்ட தங்கையும் காதலனும்.
பிள்ளைகளை கொன்று குடும்ப மானம் காத்த
பெரியோரே தாய்மாரே
அமெரிக்காவில் அப்பா அதட்டினாலே
போலிசுக்கு போன் போடும் குழந்தைகள்.
இங்கோ விரும்பியவரை திருமணம் செய்ய
இறந்தபிறகுதான் முடியுமா?
மடையர்களா
மனித உரிமையை மதிக்க தெரியாதவனுக்கு
மானம் ஒரு கேடா?
ஒரு கட்டிங்கும் கொஞ்சம் கரன்சியும் கறக்க
ஆலமர அடியில் வெள்ளையும் சொள்ளையுமாய்
வேலையற்று திரியும் வெத்துவேட்டுகளே
ஊர் மானம் காக்கும்
உளுத்துப்போன மீசைக்காரர்களே
மானம்பற்றி மனம் திருந்து சொல்வீரா?
சாதிமானம், ஊர் மானம், குடும்பமானம்
காத்த 'குலதெய்வங்களே'
பெத்த பிள்ளைகளை குத்தி உயிரெடுக்க
உனக்கென்ன உரிமை இருக்கிறது?
தமிழா இன்னுமா புரியவில்லை?
மானத்தால் பெற்றதைவிட
இழந்ததே அதிகம்.
கௌரவகொலைகள் நம் கண்முன்னே
விரவிக் கிடக்கின்றன.
உணர்வுகளை விட மனித
உரிமைகளுக்கு முதலிடம் கொடு.
அனைவருக்கும் உயிர் வாழ உரிமை உண்டு.
கவரிமான் பரம்பரைக்கே கற்றுக் கொடுத்த விசயமாம்
வேறெந்த மொழியும் கொண்டிராத வார்த்தையாம்
வேறெந்த நாடும் கண்டிராத வாழ்வியலாம்
மானம்.
மானங்கெட்ட இந்த மானம்தான்.
மானம் உள்ள எவராவது
இந்த வார்த்தைக்கு புரியும்படியான
அர்த்தம் அளிப்பாரா? இல்லை
அதன் பயன் அல்லது அதன் தேவை பற்றி
எதாவது சொல்வாரா?
மானமுள்ள தமிழர்களே
ப்ளீஸ் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.
தன்மானத் தமிழ்த் தலைவர்களே
நீங்களாவது...
அதன் ஊருக்கே தெரியுமே நீங்கள் கவரிமானா
இல்லை சாலமோனா என்று.
(சாலமோனுக்கு 700 மனைவியர், 300 துணைவியர்)
சாதிமறுப்பு திருமணம் செய்த இளசுகளை
சாதனையாளனாக்கி சரித்திரம் கண்டிருந்தால்
சந்தோசப்பட்டிருப்பேன்.
சந்தியில் நிறுத்தி பிஞ்ச செருப்பால் அடித்து
சாதி மானம் காத்த சான்றோரே
மானத்தின் அர்த்தம் சொல்வீரா?
விருதாச்சலம் கண்ணகியும் முருகேசனும்
தருமபுரி வெற்றிவேலும் சுகன்யாவும்
ஈரோடு இளங்கோவும் செல்வலக்ஷ்மியும்
திருவண்ணாமலை துரையும் தேன்மொழியும்
பரமக்குடி டேனியலும் திருசெல்வியும்
பழனி பத்ரகாளியும் ஸ்ரீ ப்ரியாவும்
தம் குடும்பத்தாராலேயே கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் வேதாரன்யத்தில் அண்ணனால்
அடித்து கொல்லப்பட்ட தங்கையும் காதலனும்.
பிள்ளைகளை கொன்று குடும்ப மானம் காத்த
பெரியோரே தாய்மாரே
அமெரிக்காவில் அப்பா அதட்டினாலே
போலிசுக்கு போன் போடும் குழந்தைகள்.
இங்கோ விரும்பியவரை திருமணம் செய்ய
இறந்தபிறகுதான் முடியுமா?
மடையர்களா
மனித உரிமையை மதிக்க தெரியாதவனுக்கு
மானம் ஒரு கேடா?
ஒரு கட்டிங்கும் கொஞ்சம் கரன்சியும் கறக்க
ஆலமர அடியில் வெள்ளையும் சொள்ளையுமாய்
வேலையற்று திரியும் வெத்துவேட்டுகளே
ஊர் மானம் காக்கும்
உளுத்துப்போன மீசைக்காரர்களே
மானம்பற்றி மனம் திருந்து சொல்வீரா?
சாதிமானம், ஊர் மானம், குடும்பமானம்
காத்த 'குலதெய்வங்களே'
பெத்த பிள்ளைகளை குத்தி உயிரெடுக்க
உனக்கென்ன உரிமை இருக்கிறது?
தமிழா இன்னுமா புரியவில்லை?
மானத்தால் பெற்றதைவிட
இழந்ததே அதிகம்.
கௌரவகொலைகள் நம் கண்முன்னே
விரவிக் கிடக்கின்றன.
உணர்வுகளை விட மனித
உரிமைகளுக்கு முதலிடம் கொடு.
அனைவருக்கும் உயிர் வாழ உரிமை உண்டு.
No comments:
Post a Comment