சமயம் சொல்லியது
கட்டளைகளைக் கடைபிடியுங்கள் என.
இவர் சொன்னார்
என்னைப் பின்பற்றுங்கள் என.
அவரால் அதைச் சொல்ல முடிந்தது.
மானுடத்தைப் பிதுக்கி மலடாக்கிய
வாழ்வியலையும், வழிபாட்டையும்
பனிரெண்டு வயதிலேயே
பேராலயப் பகுதியிலே பகுத்தறிந்தார்.
பாமரரின் பார்வையில்
சட்டத்தின் சாராம்சங்களைச்
இமயத்தின் விசாலத்திற்கு
சமயம் வரும் வரை
சத்தமின்றி இட்டுச் சென்றார்.
ஏழைக்குத்தான் நற்செய்தி எனச் சொல்ல
எசாயாவைத் தேடிப் பிடித்தபின்
மூன்றே ஆண்டுகளில் புதிய
யுத்தமொன்றை விட்டுச் சென்றார்.
அதனால்தான்
தொழுநோயளரைத் தொட முடிந்தது
விலைமகளிர் இவரால் எழ முடிந்தது
பெரும்பாடுள்ள பெண் தொட விடிந்தது
சமாரியப் பெண் தவறை விட முடிந்தது
பெண்களும் பணியில் சேர முடிந்தது- இருண்ட
கண்களும் அவரைத் தேடத் திறந்தது.
ஒடுக்கப்பட்டோரோடு உறவு கிளைத்தது
ஒதுக்கப்பட்டோரோருக்கும் உணவு கிடைத்தது.
மத்தேயு மேசைவிட்டு எழுந்ததும் - உரோமைத்
தளபதி தலை கவிழ்ந்ததும் நடந்தேறின.
‘எல்லாம் முடிந்தது’
அவரால் எல்லாம் முடிந்தது.
-செ. ஜெயன்

No comments:
Post a Comment