நடக்கும் விஷயங்கள் புதிதில்லை- ஆனாலும்
கேட்கத்தோன்றுகிறது, என்னதான் நடக்கிறது?
உசிலம்பட்டி கண்ணாயிரம் முதல்
உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா வரை
கேட்ட கேள்வி இது
தீவிரவாதிகள் எல்லாம் விருந்தாளி -
லட்சம் கோடி ஊழலானாலும் மந்திரி
பாவம், ஆடு திருடிய ஐயாச்சாமி
சிறையில் அடிபட்டு மரணம் என்கையிலும்
உட்கார்ந்து படிக்க அறை இல்லை - ஒளிந்து
ஒன்னுக்கு போகவும் வழியில்லை
கதவு திறந்திருந்தும், கல்விக் கண்திறப்பவன் இல்லை
"விரைவில் அனைவருக்கும் லேப்டாப்" என்கையிலும்
அரிசி விளைச்சல் கொஞ்சமில்லை
கோதுமை ஏற்றுமதிக்கு பஞ்சமில்லை - ஓசிக்
கஞ்சிக்கு ஓடும் ஏழைக்கூட்டம்
கிடங்குகளில் எல்லாம் எலிக்கூட்டம் - என்கையிலும்
கேட்கத் தோன்றுகிறது என்னதான் நடக்கிறது?
சிந்தனை மாற்றம் நல்லது - அனால்
சிந்தனையே மாறிப்போனது
ஏழை மேல் கருணை இல்லை
கருணைக் கடவுள் பற்றி மட்டும் நினைப்பு
உண்டியலில் கொட்டிவிட்டால் நேரே மோட்சமோ?
நினைப்பதில் பிறர்நலம் இல்லை
பிறர் பற்றி நல்லதை நினைப்பதில்லை
தான் உண்டு தன் வேலை உண்டென
உண்டு கொழுத்தவன் உறக்கமில்லாமல்
விடியும் பொழுதில் வீதியிலே
எடை குறைக்க நடை பழகுவதைப் பார்க்கும் போதும்
கேட்கத் தோன்றுகிறது
அடக்கடவுளே என்னதான் நடக்கிறது?
No comments:
Post a Comment