Friday, 18 November 2011

காவல்துறை நம் நண்பன்




காணும்போதெல்லாம் காரிதுப்புகிறேன் 
காவலனாய் இருக்க வேண்டியவன் 
காவாளியாய் இருக்கிறானே என்று.


ஆட்சியர் அனுமதியில்லாமல் 
ஆறு மணி நேரம் துப்பாக்கி சூடு 
லத்தியால் அடித்தே மூன்று பேர் சாவு 
இவ்வளவுக்கும் சண்டை இல்லை புரட்சி இல்லை
வெள்ளையர் ஆட்சியோ 
கொள்ளையர் ஆட்சிதானே!


சிறைக்கொடுமை சொல்லி மாளாது.
திருடன் தைரியமாகவே இருப்பான் - ஏழை 
இளிச்சவாயன் கிடைத்துவிட்டால்.
செய்யாத தவறுக்கு ஜெயிலில் இருக்கும் 
புண்ணியவான்கள் பல பேர்.


மகளிர் - ரொம்ப மட்டமான விஷயம்
அழகான பெண்கள் என்றால் ஐயோ பாவம்.
எப்போதோ படித்த கவிதை
"இவர்களின் லத்திக்கு 
விந்து பாய்ச்சும் திறனிருந்தால் 
எப்போதோ கர்ப்பமாயிருப்போம்." 


லஞ்சம், மாமுல் - போலீசிடம் இருந்து 
அகராதிக்கு வந்த வார்த்தைகள்.


அனைவரும் குற்றவாளிகள் அல்ல.
ஆனாலும் ஒரு துளி விஷம்தானே  
மொத்த உணவையும் நஞ்சாக்குகிறது. 







 

No comments:

Post a Comment