Monday, 14 November 2011

நான் உனக்கு யாரோதானே


தேசிய நெடுஞ்சாலை- விரைவாக வீடு வந்துசேர
வேலை முடிந்ததும் வேகமாக கிளப்பினோம்
பல்சர் வண்டி பறந்து சென்றது


திடீரென ஒரு லாரி இடமிருந்து இடைமறித்தது
ஒரு வினாடி அச்சத்தில் அவசரப்பட்டேன் 
வண்டி கவிழ்ந்தது. இருவருக்கும் சரியான அடி


அந்த நேரம்தானா அடுத்த லாரி 
பின்னே வரவேண்டும்?
நாங்கள் இருந்தது தெரியவில்லையா - இல்லை 
நிறுத்த தெரியவில்லையா என 
தெரியவில்லை
ஏற்றிவிட்டு எனக்கென்னவென்று சென்றுவிட்டான்.


"ஐயோ பாவம்" "யாரு பெத்த புள்ளையோ"
"யாராவது போங்கப்பா" "நமக்கு ஏன்யா வம்பு"
உச் கொட்டியபடி வேடிக்கைதான் பார்த்தனர்
எங்களின் வேதனையை வேடிக்கையாக பார்த்தனர் 


உதவி உதவி என என் உதடுகள் 
உளறிகொண்டிருந்தன.


"நானும் உன்ன மாதிரி மனுசன்தானே
எனக்கு மட்டும் வாழணும்னு ஆசை இருக்காதா?
நாளைக்கு உனக்கோ உன் குடும்பத்தாருக்கோ 
விபத்து ஏற்படாதுன்னு என்ன நிச்சயம்?
நான் உனக்கு யாரோதானே?" 


என் உடலில் இருந்து ரத்தம் வெளி வருவது நின்றது. 
மக்களின் மனதைப் புரிந்து கொள்ள முயன்றபோது என் மூச்சும் நின்று போனது
என் உயிர் வெளியேறியதை தடுக்க முடியாமல்.



(poem written on 30, October, seeing two dead bodies of youngsters covered on the roadside while i was passing by.)



No comments:

Post a Comment