Tuesday, 27 February 2018

தேவி… ஸ்ரீதேவி

பெரிய மரியாதை இருந்ததில்லை
கொடுக்கப்பட தகுதியும் அவருக்கு இல்லை
மானே, மயிலு என்று கலையுலகில் நடித்தவர்.
சம்பளத்திற்காகத்தான். அது சேவை இல்லை.
பிறகு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?
காதல் ஏற்கப்படாததால் எரிக்கப்பட்ட
பிஞ்சுஉடல் சாம்பலாகிக் கிடக்க
நஞ்சுண்டு இறந்த நடிகையைத்தூக்கி கொண்டாடுகிறது
வேடிக்கை இந்தியா.
கோடிகளில் புரளும் நடிகனை மீட்பராக
வெள்ளைத்தோல் நடிகையை நாயகியாக
இன்னும் எத்தனை நாள்தான் பார்ப்பாய்?

Saturday, 24 February 2018

திருடர்கள் ஜாக்கிரதை…

எங்கடா எதுடா கிடைக்கும் என
எச்சிலுக்கு அலையும் நாயைவிட தாழ்ந்தான் தமிழன்.
ஓட்டுக்காக கையெடுத்துக் கும்பிட்டவனிடம்
ஸ்கூட்டிக்காக கையேந்துகிற மகளிர்.
சீக்கிரம் சோத்துக்காக கையேந்துவோம்.
4 இலட்சம் கோடி கடனில் தமிழக அரசு
வருமானம் டாஸ்மாக் மட்டுமே
வேலை இல்லை, தொழில் இல்லை
மக்களுக்கும் அரசுக்கும்தான்.
டெல்டாவில் தண்ணீர் இல்லை
வயல்களில் கச்சா எண்ணெய் மட்டுமே மிதக்கிறது.
மூளையை இழந்தவர்களிடம்
ஏழையைத் தூக்கிவிடும் திட்டங்கள் வாய்ப்பில்லை
நாய்க்கு பிஸ்கட் போடுவது நன்றியினால் அல்ல.

Friday, 23 February 2018

என்னைத் தூக்கிலிடுங்கள்னு சொன்னீரே …

பதினோராயிரத்து நானூறு கோடி – நீரவ்மோடி சுருட்டியது.
ஏப்பமிட்டவன் எந்த நாட்டில் இருக்கிறானோ
அரசாங்கத்திடம் பதில் இல்லை.
லலித் மோடி, மல்லையா வரிசையில் இந்த வைர வியாபாரி.
வங்கி அடியாட்கள் மிரட்டியதில்
ஐம்பதாயிரம் கடன் வாங்கிய அய்யாசாமி தற்கொலை.

கால் கடுத்தாலும் பரவாயில்லை
கள்ள நோட்டு காணாமல்போனால் சரி என்றிருந்தேன்
வரிசையில் நின்று செத்ததுதான் மிச்சம்.
சுவிஸ் வங்கி கருப்புப்பணம் வருமென்றார்.
இங்கே போட்ட பணம் போனதுதானோ?
வளர்ச்சிப்பாதையில் வல்லரசு இந்தியா.

Wednesday, 21 February 2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்க

எந்தப் பிரதமருக்கும் இந்த நிலை இருந்ததில்லை
ஒபாமா வந்தார், கட்டிப்பிடித்தார், ஏன்னா பயம்.
இஸ்ராயேல் பிரதமர் வந்தார், கட்டிப்பிடித்தார், ஏன்னா ஆயுதம்.
அபுதாபி இளவரசரைக் கட்டிப்பிடித்தார், ஏன்னா எண்ணெய்.
கனடா பிரதமர் ஜஸ்டினை ஏறெடுத்து பார்க்கவில்லை.
மோடிக்குத் தெரியும் யார் தமக்குத் தேவையென்று.

இவர் தமிழரின் நண்பர்,
பொங்கலை வேட்டி சட்டையோடு கொண்டாடி
அரசு விடுமுறை அளித்து, 
தையை தமிழ் பாரம்பரிய மாதமாக மாற்றிய தலைவன் அவன்.
கனடாவின் தேசிய கீதத்தை தமிழிலும் பாட வைத்தவன்.
நாம் வாழ்த்துவோம் தங்கத்தமிழர் காவலனை.

Tuesday, 20 February 2018

கமல் வர்றார் பராக்… பராக்…

பால் ஊற்றி, மாலைபோட்டு, சூடம் காட்டி
கட்அவுட் கட்டி பிளக்ஸ் போர்டு வைத்தவன்
கட்சி நிர்வாகி, நாளைய எம்.எல்.ஏ.
சினிமாவைச் சேராத இன்றைய தலைவர்கள்
இந்த அளவுக்கு நடிக்கும்போது
பல்லாண்டுகால நடிப்பு கைகொடாமலா போய்விடும்?
கமல் வர்றார் பராக்…பராக்…
ரஜினி வந்தாலும் வருவார் பராக்…பராக்…

Friday, 16 February 2018

காவிரின்னு ஒரு ஆறு இருந்துச்சாம்…

பாலாறு பாலம் தேவையில்லா அளவுக்கு பாழாய்ப்போனது
வைகை வறண்டு பல்லாண்டு ஆனது.
தாமிரபரணியை பெப்சியிடம் தாரை வார்த்தாயிற்று.
கார்காலத்தில் மட்டும் ஓடிவந்த காவிரிநீரும்
இப்போது கானல்நீராகிறது.
இழுத்துக்கொண்டிருந்த ஏழை விவசாயியை
ஈமச்சடங்கிற்கு இழுத்துச்சென்றார்கள்
காலன்போல வந்து காவு வாங்கிய நீ/சா/நி/திபதிகள்.
‘மக்கள்’அரசு இனி மணல் அள்ளி விற்கலாம் வருடம் முழுதும்.
லெமூரியா போன்று கானாமல் போகலாம் காவிரி டெல்டா.

Wednesday, 14 February 2018

ஆரிய நாய்கள் இரைதேடுகின்றன

ஆரிய நாய்கள் இரைதேடுகின்றன
அண்ணா பூமியா இது?
ஆண்டாளின் பூமியல்லவா!
பெரியார் மண்ணா இது?
பெரியாழ்வார் மண்ணல்லவா!
பகுத்தறிவு வெளிச்சம் மங்கிய வேளையில்
எழுத்தறிவு இருந்தும் எழுச்சி இல்லாத
பழந்தமிழர்நாடு இன்னும் படுத்துறங்குகிறது.
கார் டயரில் விழுந்தவன் அவாள் செத்தபிறகும் எழவில்லை.
எவனையும் எழவும் விடாத வெள்ளயர்கள் இவர்கள்.
பாரதநாடே பைந்தமிழர்நாடு, அண்ட வந்தது ஆரியனே.
மதமாகப் பிரித்து ஆளத்துடிக்கிறான்
இனமாக சேர்ந்து ஈன நாயை விரட்டு தமிழா…